Tuesday, April 5, 2011

பட்டமளிப்பு விழா.

கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகிருக்கும்…. நான் துள்ளி திரிந்த கல்லூரிக்கு சென்றேன், இரண்டு நாட்களுக்கு முன்….. ஆம் அது எங்கள்  பட்டமளிப்பு விழா. எத்தனையோ SMS , ஈமெயில்… என்று நண்பர்கள் அனுப்ப… ஆவலுடன் காத்திருந்தேன் அந்த தருணத்திற்கு. நினைவுகள் என்றும் அழியா வரம் பெற்றிருப்பதை அன்று தான் உணர்ந்தேன். கல்லூரிக்கு செல்ல 7A பஸ் ஏறியதும்…. பற்பல நினைவுகள்…. காலேஜ் காலத்தில் அந்த ஓட்ட பஸ்சில் பயணம் செய்த இனிமையான நாட்கள்….. அதே 6 ருபாய் டிக்கெட்…. பழக்கபட்ட கண்டக்டர்…… கடந்த நினைவுகளை  ஓட்டிக்கொண்டே பெருந்துறையில் இருக்கும் என் கொங்கு கல்லூரி சென்றடைந்தேன்… 

…….
கல்லூரியில் எண்ணற்ற மாற்றங்கள் இருந்தாலும்…… என் நினைவுகள்  அனைத்தும் உயிருடன் இருந்தது ….. ரோட்டில் நடக்கும் போதும்… அங்கே, இங்கே, பார்த்தாலும் எல்லாம் பசுமையான பழைய ஞயாபகம்… என் காலில் தடுக்கிய இந்த கற்களுக்கு கூட என் பழைய நினைவை  ஏற்படுத்தும் சக்தி இருந்தது அப்போது தான் புரிந்தது…
……
……….
அங்கே இருந்த கூட்டத்தில்… பழகிய என் நண்பர்களை நான் தேட…. இவ்வளவு வேகமாக என் கண்கள் தேடும் என்று இன்று தான் எனக்கே தெரியும்…… பல மாதங்களுக்கு பிறகு நண்பனை பார்க்கும் போது…..
என்னனவோ மாற்றம்…. கிட்ட தட்ட எல்லா நண்பர்களும் தோற்றத்தில் மாறி இருந்தார்கள்…. பேச ஆரம்பித்தவுடன் பல மணி நேரம் ஆகிவிட்டது….
….
சரி வாங்கடா…. department போவோம்…. என்று நடக்க….. உள்ளே நுழைந்தவுடன்… என் கண்ணில் பட்டது எங்க லேப்….. இது வெறும் லேப் மட்டும் இல்ல… இங்க தான் நாங்க தக்கி முக்கி final year ப்ராஜெக்ட் முடித்தோம்…. சிறு குழந்தையை போல் நான்…. நான் செய்த ப்ராஜெக்ட் இன் ஒரு சிறு nut ,bolt    எதாவது  கண்ணில் படுமா என்று தேட… என் ப்ராஜெக்ட் இன் tank (My project was  level  control ) கண்ணில் பட அவ்வளவு சந்தோசம்…..
பின்பு எல்லா staff களையும் மீட் பண்ணி விட்டு…. degree வாங்க auditorium சென்றோம் …..
…….
………
ஒவ்வொருவராய் வரிசையாய் டிகிரி வாங்க….. என் தருணம் வந்தது…..
மச்சான் நானும் engineer டா…. என்று இனம் புரியா சந்தோசம் எல்லோரையும் தழுவ…… வாழ்வில் மறக்க முடியா தருணமாக இது அமைந்தது….
….
……….
பல்வேறு நினைவலைகளை கிளப்பிய இந்த பட்டமளிப்பு விழாவே……. எனக்கு ஒரு அழியா நினைவாய் மாறி  விட்டது….  
……..

Tuesday, March 15, 2011

ஜப்பான் சுனாமி !!!

தோல்விகளில் துவழ்ந்த நான்     

         உன் என்றும் ஓயா அலைகள் கண்டு

விடாமுயற்சியை கற்று கொண்டேன்

         துன்பமான வேளைகளில் நான்

உன் பரந்த கடற் கரையில் அமர்ந்து

         அமைதியினை தெரிந்து கொண்டேன்

பரந்து விரிந்த மண்ணுலகை  விட

         ஆயிரம் உயிர் வாழ வழி தந்த நீ

 யார் மீது கோபம் கொண்டாயோ

         என் அன்பு கடல் தாயே

உழைப்பின் உதாரணமான ஜப்பான் மேல்

        சீற்றம் கொண்டு எழுந்தது ஏன்?

ஆயிரம் ஆயிரம் உயிர்களை நீ

        இறக்கம் இல்லாமல் விழுங்கியது ஏன்?

அவர்கள் வீடுகளையும் பொருட்களையும்

        உடைத்து துவம்சம் செய்தது ஏன்?

மின்சாரம் தந்த அணு உலையை

        உடைத்து கதிர் வீச்சு ஏற்படுத்தியது ஏன்?

நீ ஏற்படுத்திய சேதங்களுக்கு

        ஒன்றாய் உதவுகின்றன உலக நாடுகள் !!!

எங்கோ ஏற்பட்ட இந்த விபரிதம்

        அழுகிறார்கள் மக்கள் உலகமெங்கும் !!!

நாடுகளாய் பிரிந்திருந்த எங்களுக்கு

        ஒற்றுமையை மீண்டும் உணரச்செய்தாய் !!!!

மனிதநேயம் வளர வழி செய்தாய் !!!!

Monday, March 7, 2011

ஏழை தாய்!!

உச்சி வெயிலில் செங்கல் சுமந்து

             ஒரே வேளை களி உண்டு

கிடைத்த அந்த சொற்ப கூலியை

            சேர்த்து வைத்தாள் மகன் படிப்பிற்கு!!!!!!

நல்லவனா?? கெட்டவனா????

ரூமில் இருந்து  காலையில் நான் நடந்து செல்லும் சாலையில் தினமும் பிச்சை எடுக்கும்  பிச்சைகாரரை இன்று காணவில்லை……. எனக்கு மனதே சரியில்லை…. எதோ ஒரு மாதிரியாய் இருந்து…..யார் அவர்? … அவர் இல்லை என்றல் என் மனது ஏன் பதற வேண்டும்?……
…..
……..
வேலைக்கு போகும் முன் அணைத்து பொருட்களையும் எடுத்துவைத்தாலும், கிளம்பும் முன் வாசலுக்கு வந்த பின்…. ச்ச ID கார்டு விட்டுட்டு வந்துட்டேன், வாட்ச் மறந்துட்டேன்னு சொல்வது எனக்கு மட்டுமல்ல…. பலரது வாடிக்கை என்று நினைக்கிறேன்…. இப்படி இருக்க… ஒரு நாள் கூட மறக்காமல்  நான் செல்லும் போது தவறாமல் என்னிடம்….. “ஐயா பிச்சை போடுங்க” என்று கேட்டு விடுவார். ஒரு நாள் பிச்சை போட்டேன் , இரண்டு நாள் பிச்சை போட்டேன்….பின்பு பிச்சை போடுவதில்லை…. ஆனால் தினமும் அவர் குரல் கேட்டவுடன் தான் ஏன் அன்றைய வாடிக்கை துடங்கும்….. 
…….
……….
இன்று அவர் இல்லை என்றவுடன்,எதோ ஒரு கவலை…. அவருக்கு என்ன ஆகிருக்கும்?? ……பார்த்தால் மிகவும் நோயாளி மாதிரி இருப்பார்… ஒரு வேலை இறந்திருப்பாரோ?…. என்று சிந்தித்து கொண்டே சென்றுவிட்டேன்…. பின்பு ஒரு மாதம் ஆகியும் அவரை காணவில்லை….
….
……….
பின்பு என் நண்பனுடன் படம் பார்க்க சென்றபோது தான் உண்மை தெரிந்தது… அவர் தியேட்டர் முன் பிச்சை எடுத்துகொண்டிருந்தார்.. பிறகு தான் எனக்கு புரிந்தது அவர் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை  இடத்தை மாற்றி பிச்சை எடுப்பது…. அவர் நிழலில் மட்டும்  தான் அமர்வார். ஒரு பையில்  காசை சேர்த்து வைத்து  கொண்டே  ஒரு காலி பாத்திரத்தில் பிச்சை எடுப்பார்….இதை பார்த்த  பின் என் கண்ணோட்டம் மாறி விட்டது…
……
…………
கல்லூரிக்கு பின்  சென்னையில் கழித்த இந்த ஒரு வருடத்தில், நான் இழந்த பலவற்றில் முக்கியமானது மனிதாபிமானம். தாம்பரத்தில் இருந்து T 51 பஸ்சில் மேட்டுக்குப்பம் வரை தினமும் வருவது வழக்கம். தினமும் காலையில் ரயில் நிலையம் தாண்டி, கிழக்கு தாம்பரம் வந்து தான் பஸ் ஏறுவேன்…
…..
அதிகாலையில் நான் பார்ப்பது முதலில் ஆச்சிரியமாக இருந்தாலும் பின்பு சகஜமாகிவிட்டது. காலையில் பிச்சைகாரர்கள் settle ஆகும் டைம் அது  . எல்லோரும் ஒரு ஆபீஸ் இருப்பது போல் அவர் அவர் இடத்தில வந்து correct ஆக அமர்வார்கள். பின்பு தன் பையில் இருக்கும் சில பொருட்களை சரி செய்து விட்டு ரெடி  ஆவர்கள். நான் நிறைய முறை அந்த குருட்டு பிச்சைகாரர் திறமையாக செல்போன் பயன்படுத்துவதை பார்திருக்கேறேன். இதில் ஒரு ஆசிரியம் என்னவென்றால் எல்லோரும் வேலைக்கு போவதுபோல் குளித்து விட்டு, பவுடர் அடித்து விட்டு வருகின்றனர். தினமும் அங்கு இருபவர்களில் யாரவது ஒருவராவது தலை வாருவதை பார்க்கலாம்.உற்று கவனித்தால் அவர்கள் neat  ஆக பவுடர் அடித்திருப்பது தெரியும். பிச்சை எடுபதற்க்கு எதுக்கு neat ஆக இருக்க வேண்டும்?? நிறைய நாட்கள் கலைமாமணி கவுண்டமணி யின் காமெடி  (பிச்சைகாரர்கள் சங்கம் நடத்துவது ) நினைவுக்கு  வரும். உண்மையில் யார் origional பிச்சைகாரன் யார் duplicate என்பதே தெரியவில்லை…..
………..
……………….
ஒருவேளை கர்ணன் இன்று உலகத்தில் இருந்தால் அவரிடம் கொடுபதற்கு எதுவம் இருக்காது.
……..
…………
மக்களிடம் மனிதாபிமானம் குறைந்து விட்டதாக இன்றைய திரைப்படங்கள் சித்தரிக்கின்றன( ஷங்கரின்  அந்நியன் திரைப்படம்). ஆனால் என் இந்த சென்னை அனுபவத்தில் இது பொய் என்றே கருதுகிறேன். நம் மக்களின் மனைதபிமானத்தை தவறாக பயன்படுத்துவதே இந்த மாதிரி பிச்சைகாரர்கள் தான். அப்படி மனிதாபிமானம் உண்மையில் குறைந்து விட்டால் இவர்களுக்கு காசு collection ஆகாது.
…..
………..
இது மாதிரி காட்சிகள் என் மனதை குழப்பி விட்டன….முன்பு பிச்சை போட்டுகொண்டிருந்த நான், பின்பு யார் உண்மையிலே இயலாதார் என்று புரிவதில்லை என்பதால் எதுவும் செய்வதில்லை. மனதை கல்லாக்கி கொண்டு சென்று விடுகிறேன்.
…..
……….
யாரவது நம் முன்….. இயலாமையின் மருவுருவமாக …..ஐயா பிச்சை என்று(குறிப்பாக கையில் கைகுழந்தையுடன்) கேட்டல் யாவரும் மனம் உருகி விடுவோம். அனால் பிச்சை  அவர்களுக்கு தொழில் என்று தெரியும் போது மனது வலிக்குறது. இதை சரிசெய்ய அரசு முன்வருவதில்லை…. நம்மிடம் அதிகாரம் இல்லை…. ஒட்டு ஒன்று மட்டும் போடலாம்…. நல்லரசு வரும் என்பது சந்தேகம் தான்…….
……
………
ஒரு பக்கம் தினம் தினம் ஏழ்மை…. இயலாதவர்கள்…. பிச்சைகாரர்கள்…..மறுபக்கம் தினம் தினம் நாட்டில் உழல், 100 கோடி 1000 கோடி ….இப்போது லட்சகணக்கில் கோடி….. என்ன செய்ய….. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை….. பேசாமல் நான் உண்டு  என் வேலை உண்டு என்று இருக்கிறேன் …….

நான் நல்லவனா?? கெட்டவனா???? ஒன்றும் புரியவில்லை……
……..
……….

Thursday, March 3, 2011

பெண்!!!

மின்னல் சாட்சியுடன் இடி ஒலிக்க

        மண் காண தயாராகும் மழை
 
அக்னி சாட்சியுடன் மேளம் ஒலிக்க

        மணம் முடிக்க தயாராவாள் பெண்

கரடுமுரடான மலைகளின் மேல் பொழிய

      வேதனையாய் இருக்கிறது   மழைக்கு 

பேரன்பான தாய் தந்தையை பிரிய

      வேதனையாய் இருக்கிறது  பெண்ணுக்கு

மழை பொழிந்து ஆற்றுநீர்  வயல் சேர

       இன்பத்தின் உச்சியடைந்ததாம் வயல்

மணம் முடித்து பெண் புதுவீடு புக

      இன்பத்தின் உச்சியடைந்தாராம் கணவர்

நாற்று ஒன்று நெர்கதிறாய் வளர

     அடிப்படியாய் இருப்பது தான் மழை

புகுந்தவீடு நற்பெயரோடும் புகழோடும் உயர

     அடிப்படையாய் இருப்பவள் தான் பெண்

நாட்டு  நிலங்கள்  செழிப்பான பின்

     கடல் சென்று கடமை முடிக்கும் நீர்

பிள்ளைகளை நன் முறையாய் வளர்த்து அவர்களுக்கு

     மணமுடித்து தன் கடமை முடிப்பாள் பெண்

 நீர் இன்றி நம் உலகில்லை!!!

      பெண் இன்றி நாம் யாருமில்லை!!!

விதை!!!

பயனில்லை என்று துக்கி எறியபட்டு 

      கண்ட இடங்களில் விழுந்து புரண்டு

யார் யாரோ கால்களின் மிதியடி பட்டு  

       வெயிலிலும் மழையிலும் அழுது புரண்டு 

குப்பையோடு குப்பையாய் ஒன்றி வாழ்ந்து  

        மண்ணோடு புதையுண்டு  போன பின்னும்

மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன்  
          
         மண்ணோடு தினம் தினம்  போராடி

செடியாக விண்ணோக்கி வளர்ந்து வந்து 
          
         மாபெரும் மரமாகி நிற்கிறேன்

உலகிற்கு உதவியாய் இருக்கிறேன்

Tuesday, March 1, 2011

3D MOVIE

Introduction:
Be it the wonderful magic by a great magician, the truth is that it is not real. But one thing that makes it credible is our Eyes. Right from days of introduction of motion pictures by Edison to the present day Digital 3D movie, our eyes make it real (perceived to be real). It is wonderful to note that motion pictures (Movies) are sets individual pictures displayed one by one in same screen very fast, like a flicker book. So to understand 3D movie a basic understanding of our bifocal eyes or stereoscopic view is a must.
Eyes:
Below you find the construction of an eye. The pupil is the aperture (as in camera). The iris acts as a diaphragm and the ciliary muscles adjust or make the eye lens thin and thick to focus image clearly.
Remember we have two eyes. That is our eyes are bifocal. That is we see an object in two angles. Two set of images is sent to our brain and our brain fuses the image and then only we could perceive depth or judge deepness.
Understanding Bi-focal of eye:
Take a piece of sheet roll it and see through it. You would see a distant object. Now take your hands close to it as in below picture.
What you see (Both eyes open). You see a hole in your palm. “That is how our eye perceives” This is the basic of 3D Movie.
The below you will find the image clearly showing the Bifocal nature of eyes.
You could see the eye sees the pins in different angle. One eye gets its right image and other its left. Only then we can judge the shape, distance and other nature of it.


3D Concept:
3D is yet another concept like motion pictures (Movies), to blind fold our eyes. In other words 3D film makes us to perceive depth by showing 2 different images in both eyes, one in perspective to right and other to left.
The above picture is a 3D picture of Mars taken by Pathfinder. Note the two images superimposed one in right eye perspective and other to left. (This photo is actually an Analgyph using additive and subtractive colors to perceive 3D effect).
 
The above displayed is the 3D camera. Note the two lenses.
Now that, we take two pictures in two different perspectives, and record it in a single film.
Below given picture of 3D film projection will show the how simultaneously two pictures are projected.
Now it is clear that the role of 3D glasses is to separate the two pictures projected in a single screen into two images, in perspective (angle of view) to each eye.
That is it. When two separate images of different angles of same object is perceived by our eye, we see the depth or 3D effect.
Technique for separation:
There are several available techniques like Anaglyph, Eclipse method, Interference technique or the Pulfrich Effect. The recent one is of Polaroid method. Out of the recorded two images one is horizontally polarized and other vertically polarized.
The 3D Spectacles we wear has the same Polaroid Glasses. For Example, Take the case Right eye glass of 3D Spectacles is vertically polarized. It will block the image for left eye (Horizontally polarized), thus getting two different images for each eye in its own perspective and makes it real.
What to note next time you see 3D movie?
  1. Always you can see 2 hazy images without 3D glasses.
  2. The closer the object you see with 3D spectacles, in screen it has the farther distance between two projected images.
  3. Get your neighbor’s goggles, keep his left eye’s glass in your right eye’s glass, you will get nil polarized or darkness. Now slightly rotate you will see light coming in.(This because of Polaroid nature of  glasses).
Future Guesses:
In my point of view, the current methods of seeing movie will exist till early 2020. After that there may be some kind of innovation in 3D sector with improvised in 3D effect. There will be invention to view 3D movie without 3D glass. I guess there may be some new development like spherical screen projection similar in shape like a contact lens, by using that you will be seeing the movie from inside it, like you are a part of movie.
…….
……………
To be continued ….
Any doubts or clarifications… please mail me or give comments.